தனிநபர் நிதி திட்டமிடல் - 6 ஓய்வு கால நிதி (Retirement Fund) - Save & Invest

சேமிப்பு, முதலீடு, தனிநபர் நிதி திட்டமிடல்

Saturday, 16 June 2018

தனிநபர் நிதி திட்டமிடல் - 6 ஓய்வு கால நிதி (Retirement Fund)


இந்த தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க கீழே காணும் இணைப்புகளை கிளிக் செய்யவும்.


தனிநபர் திட்டமிடலில் முக்கியமானது ஓய்வுக் கால நிதி ஆகும். நம்மால் உழைக்க இயலாத போது நமக்கு ஓய்வு கால நிதி கைகொடுக்கும். நாம் 25 வயது முதல் சுமார் 60 வயது வரை உழைக்கிறோம், அதன் பிறகு நமக்கு வருமானம் இருக்காது அதனால் நாம் ஓய்வு கால நிதியை கண்டிப்பாக தேவைப்படும். Image Credit - kalpenagroup.com 

எவ்வளவு தொகை நமக்கு ஓய்வுகால நிதியாக தேவைப்படும்?

நாம் தற்போது மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெறுகிறோம் என்றால் நமது ஆண்டு வருமானம் 3 லட்சம் ஆகும் பொதுவாக நமது செலவினத்தில் 70 சதவீத தொகை ஓய்வு காலத்தில் செலவுத் தொகையாக இருக்கும்.

இப்போது நாம் ஆண்டுக்கு ரூபாய் இரண்டு லட்சம் செலவு செய்கிறோம் என்றால் ஆண்டுக்கு ஓய்வு பெறும் போது ரூபாய் 1.4 லட்சம் தேவைப்படும். 60 வயதிலிருந்து தோராயமாக 25 வருடங்கள் வாழ்வோம் என்று வைத்துக்கொண்டால், ரூபாய் 35 லட்சம் தேவைப்படும். 

பொதுவாக 85 வயதிலிருந்து உங்கள் வயதை கழித்தால் வரும் எண்ணை உங்கள் ஆண்டு செலவின் 70 சதவீத தொகையுடன் பெருக்கினாள் வரும் தொகையே ஓய்வுகால நிதியாகும். 

உதாரணமாக, என்னையே எடுத்துக் கொள்ளுங்கள் என்னுடைய மாத செலவு தற்போது 15 ஆயிரம் ஆண்டு மொத்த செலவு ரூபாய் 1.8 லட்சம் இதில் 70 சதவீதத் தொகை ரூபாய் 1.26 லட்சம் ஆகும். இப்போது எனது வயது 30. 85 வயதிலிருந்து எனது வயது முப்பதை கழித்தாள் 55 வரும் இந்த 55 உடன் ரூபாய் 1.26 லட்சத்தை பெருக்கினால் வரும் தொகை சுமார் 70 லட்சம் ஆகும். இந்த தொகை இருந்தால்  நான்  ஆயுள் முழுவதும்  வேலை செய்யாமல்  வாழமுடியும் இந்த கணக்கீடு பொருளாதார இலக்குகள் இல்லாத நிலையில் கணக்கிட்டதாகும். 

நாம் அனைவரும் நமது பிள்ளைகளின் கல்வி மற்றும் திருமணம் போன்ற இலக்குகளுக்கு சேமிப்பது போல ஓய்வுகால நிதியையும் ஒரு இலக்காக எண்ணி அதற்காகவும் நமது வருமானத்திலிருந்து சேமிக்க வேண்டும்.


No comments:

Post a Comment