நீங்களும் பணக்காரர் ஆகலாம் (you can be rich) - Save & Invest

சேமிப்பு, முதலீடு, தனிநபர் நிதி திட்டமிடல்

Tuesday, 1 May 2018

நீங்களும் பணக்காரர் ஆகலாம் (you can be rich)

நம் அனைவருக்கும் பணக்காரர் ஆக வேண்டும் என்று எண்ணமிருக்கும். அதற்காக நாம் அனைவரும் மிகவும் ஆசைபடுகிறோம். ஆனால் ஏன் நம்மால் பணக்காரர் ஆக முடிவதில்லை?

''நாம் பணக்காரர் ஆவதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடுவதில்லை''

நாம் ஏன் எவ்வித முயற்சியும் செய்யவில்லை? அடிப்படையில் நமது சமூக அமைப்பு பணக்காரர் ஆவதற்கு பதிலாக ஒரு தொழிலாளியாக அல்லது ஊழியராக பணிபுரியவே உந்துகிறது. இதன் பொருட்டு சமூகத்திற்கு கட்டுப்பட்ட நமது பெற்றோரும் நாம் நன்றாக படித்து நல்ல நிறுவனத்தில் /அரசு பணியில் சேர்ந்து வாழவே (பிழைக்கவே!?) ஆசைப்படுகின்றனர்.

நாமும் பொருளாதார கல்வி இல்லாததால் நன்றாக படித்து ஒரு நல்ல நிறுவனத்தில் பணிசேர்ந்து செட்டிலாகி விட்டால் போதும் என்ற எண்ணத்திலேயே வாழ்க்கையை அப்படியே ஓட்டிவிடுகிறோம்.

அப்படியே நம் பெற்றோரின் எண்ணத்தையே நாமும் பிரதிபலித்து, அதனை நம் பிள்ளைகளுக்கும் கற்று கொடுத்துவிடுகிறோம். இது அப்படியே வாழையடி வாழையாக தொடர்கிறது.

ஏழை மக்களும் நடுத்தர மக்களும் ஏன் பணக்காரர் ஆவதில்லை?

இவர்கள் பணி பாதுகாப்பு என்ற ஒன்றை மந்திரத்தை மட்டும் நினைவில் கொண்டு பணக்காரர் ஆவதற்கான எவ்வித முயற்சியும் செய்வதில்லை. ஏனெனில்,  புதிதாக தொழில் செய்தால் தற்போது தான்
பெறும் ஊதியத்தை இழந்து விடுவோமோ என்று அச்சப்பட்டுக் கொண்டு அப்படியே இருக்கிறார்கள். எவ்வித சோதனை முயற்சியிலும் ஈடுபடுவதில்லை. தாமஸ் ஆல்வா எடிசன் தனது வெற்றி பற்றி பின்வருமாறு கூறியிருக்கிறார். ''நான் ஒரு முறை வெல்வதற்கு நூறு முறை தோற்றிருக்கிறேன்''

பணக்காரர் ஆகவேண்டுமெனில் முதலில் நாம் விடாமுயற்சி செயல்பட வேண்டும். ஏனென்றால் முயற்சி செய்தவர்கள் தோற்றிருக்கிறார்கள். ஆனால் விடாமுயற்சி கொண்டவர்கள் ஒருபோதும் தோற்றதில்லை.

No comments:

Post a Comment