மியூச்சுவல் பண்ட் - ஓர் எளிய அறிமுகம் (Mutual Fund) - Save & Invest

சேமிப்பு, முதலீடு, தனிநபர் நிதி திட்டமிடல்

Saturday, 19 May 2018

மியூச்சுவல் பண்ட் - ஓர் எளிய அறிமுகம் (Mutual Fund)
மியூச்சுவர் பண்ட் (தமிழில் பரஸ்பர நிதி) என்பது ஒரு முதலீட்டு கருவி. இம்முறையில் முதலீட்டு மேலாளர்கள், பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை திரட்டி அத்தொகையை நிறுவன பங்குகள், கடன்பத்திரம் முதலானவற்றில் முதலீடு செய்வார்கள். இந்ந பணமே மியூச்சுவல் பண்ட் எனப்படும். Image Credit – theway.in


இந்த தொகையை முதலீட்டு மேலாளர்கள் தகுந்த வழிகளில் முதலீடு செய்து அதனால் கிடைக்கும் லாபத்தை, முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்து அளிப்பார்கள்.

Read: தொடர் - வாழ்வை வளமாக்கும் தனிநபர் நிதி திட்டமிடல்

உதாரணமாக ஐவர் தலா ரூ.1000/- என மொத்தம் ரூ.5000/- மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்கிறார்கள் எனில், ஒரு அலகின் விலை ரூ.10/- எனக் கொண்டு இதனை 500 அலகுகளால பிரிக்கலாம். ஐவருக்கும் தலா 100 அலகுகள் அளிக்கப்படும். ஒரு அலகின் விலை முதலீடு செய்யப்படும் திட்டத்திற்கேற்ப தினமும் ஏற்ற / இறக்கத்திற்கு உட்பட்டு மாறுபடும். இதனை ஆங்கிலத்தில் NAV (Net Asset Value) என்பர். இவர்கள் பணம் தேவைப்படும் போது மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தில் விற்று பணத்தை பெற்று கொள்ளலாம்.

மியூச்சுவல் பண்ட் வகைகள்

1. கடன் சாரந்த பண்ட்கள்
2. பங்குச்சந்தை சார்ந்த பண்ட்கள்.
3. பேலன்ஸ்டு பண்ட்கள்.

கடன் சார்ந்த பங்குகள்

கடன் சார்ந்த பண்ட்கள் அரசு, தனியார் நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களில் முதலீட்டாளர்களின் பணத்தை முதலீடு செய்யும். இது பெரும்பாலும் ரிஸ்க் குறைவானது. ஆண்டிற்கு லாபம் 6-8% கிடைக்கும்.

இது 5 ஆண்டு வரையிலான முதலீட்டு காலத்திற்கு ஏற்றது.

இதில் கடன் பத்திரங்கள் முடிவு பெறும் காலத்தை பொறுத்து  பண்ட்கள் பிரிக்கப்பட்டிருக்கும்.

பங்குச்சந்தை சார்ந்த பண்ட்கள்

இம்முறையில் பண்ட்-ன் தொகை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் பங்குகளில் முதலீடு செய்யப்படும். இந்த பண்ட்-ல் நீண்ட கால அடிப்படையில் முதலீடு ரிஸ்க்கை குறைக்கும். ஆண்டிற்கு 12-15% லாபம் கிடைக்கும்.

இது 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட முதலீட்டிற்கு சிறந்தது.

இதில் தொகை முதலீடு செய்யப்படும் நிறுவனத்தின் சந்தை மதிப்பை பொறுத்து பண்ட்கள் பிரிக்கப்பட்டிருக்கும்.

1. லார்ஜ் கேப் பண்ட்.
2. மிட்கேப் பண்ட்.
3. ஸ்மால் கேப் பண்ட்.
4. மல்டிகேப் பண்ட்.

பேலன்ஸ்டு பண்ட்கள்

இந்த பண்ட்கள் தொகையை காலத்திற்கேற்ப கடன் பத்திரங்கள் மற்றும் பங்குச் சந்தை ஆகியவற்றில் இரண்டிலும் முதலீடு செய்யும்.

இது ஓர் எளிய அறிமுகமே. முதலீடு மேற்கொள்ளும் முன் அவரவர்களுக்கு தகுந்த திட்டங்களை ஆய்வு செய்து முதலீடு செய்யலாம். அல்லது முதலீட்டு ஆலோசகரின் ஆலோசனை பெற்றும் முதலீடு மேற்கொள்ளலாம்.

No comments:

Post a Comment