தனிநபர் நிதித் திட்டமிடல் - 4 (ஆயுள் காப்பீடு) (Personal Finance) - Save & Invest

சேமிப்பு, முதலீடு, தனிநபர் நிதி திட்டமிடல்

Saturday, 26 May 2018

தனிநபர் நிதித் திட்டமிடல் - 4 (ஆயுள் காப்பீடு) (Personal Finance)

இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளை காண பகுதி-1  பகுதி-2 பகுதி-3


 ஒரு வேளை நீங்கள் எதிர்பாராத விதமாக இறந்துவிடின், உங்கள் குடும்பத்தை யார் கவனித்து கொள்வர்?  எவ்வாறு காப்பாற்றப்படும்?

நீங்கள் தான் உங்கள் குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் என்றால், உங்கள் எதிர்பாரா இறப்புக்கு பின் உங்கள் குடும்ப வருமானம் என்னவாகும்?

நீங்கள் வீட்டுக்கடன் / இதர கடன் பெற்றுள்ளீர்கள் எனில் உங்கள் உங்கள் எதிர்பாரா இறப்புக்கு பின் உங்கள் கடனை யார் செலுத்துவார்கள்?

உங்கள் எதிர்பாரா இறப்புக்கு பின் எவ்வாறு உங்கள் பிள்ளைகளின் கல்வி / திருமணம் போன்றவற்றிற்கு பணம் கிடைக்கும்?

மேலே உள்ள கேள்விகளுக்கெல்லாம் ஒரே ஒரு விடை தான் உண்டு.

ஆயுள் காப்பீடு.

காப்பீடு என்றாலேஅபசகுனம் என்று எண்ண வேண்டாம். இது தனிநபர் நிதித் திட்டமிடலில் மிக முக்கியமானது. வாழ்க்கை என்று வந்துவிட்டால் அனைவருக்குமே ரிஸ்க் உண்டு. அந்த ரிஸ்க்கை எதிர்கொள்ள செய்து கொள்வது தான் காப்பீடு. Image Credit -mamalaughlin.com

Read: மியூச்சுவல் பண்ட் - ஓர் எளிய அறிமுகம்

வருமானம் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் மாதாந்திர் வீட்டு செலவு, பிள்ளைகளின் கல்வி செலவு, ஓய்வு காலத்திற்கான சேமிப்பு, பிள்ளைகளின் திருமணத்திற்கான சேமிப்பு என கணக்கு போட்டு சேமிப்பும் செலவும் செய்கிறோம். திடீரென்று வருமானம் ஈட்டும் நபர் எதிர்பாராமல் இறந்துவிட்டால் என்ன செய்வது? இந்த ரிஸ்க்கை எப்படி கையாள்வது?

அந்த ரிஸ்க்கை, நாம் அனைவரும் ஆயுள் காப்பீடு எடுத்து கொள்வதின் மூலம் எளிதாக கையாளலாம்.

சரி.. ஆயுள் காப்பீடு எடுப்பது என்று முடிவு செய்தாகிவிட்டது. எவ்வளவு தொகைக்கு எடுக்க வேண்டும்.?

ஒருவரின் வருடாந்திர வருமானத்தை போல 10 - 15 மடங்கு எடுத்து கொள்வது போதுமானதாக இருக்கும்.

உதாரணமாக, சுரேஷ் (வயது 30) என்பவர் ரூ. 25000/- மாத ஊதியம் பெறுகிறார் என்றால், அவரின் ஆண்டு வருமானம் ரூ. 300000 ஆகும். அவர் சுமார் 30 இலட்சம் முதல் 45 வரை ஆயுள் காப்பீடு எடுத்து கொள்வது நலம்.

தொகையையும் முடிவு செய்து விட்டால் அடுத்தது பாலிசி எடுக்க வேண்டும். எப்படி?

ஆயுள் காப்பீட்டில் இருவகைகள் உள்ளன.

1. எண்டவ்மேன்ட் பாலிசி.
2. டேர்ம் பாலிசி.


எண்டவ்மேன்ட் பாலிசி

சேமிப்புடன் சேர்ந்த காப்பீடு. இதற்கு பிரிமியம் தொகை அதிக செலுத்த வேண்டும்.  இந்த முறையில் சேமிக்கப்படும் காப்பீட்டிற்கு 5 % வரையே இலாபம் கிடைக்கும். இது நீண்ட கால அடிப்படையில் சேமிப்பதற்கு சிறந்த முறை அல்ல. 30 இலட்சம் காப்பீட்டிற்கு, 30 வருடம் என்றால் வருடாவருடம் ரூ. 90000/- செலுத்த வேண்டும். இது மிகவும் செலவு பிடிப்பது. அனைவருக்கும் பொருந்தாது.

டேர்ம் பாலிசி

ஆயுள் காப்பீடிற்கு சிறந்தது. மிக குறைந்த பிரிமியம், அதிக கவரேஜ் ஆகியவை இதன் சிறப்புகள். 30 இலட்சம் காப்பீட்டிற்கு, 30 வருடம் என்றால் வருடாவருடம் ரூ. 3000/- செலுத்தினால் போதும். இம்முறையில் நாம் கட்டிய பணம் திரும்ப கிடைக்காது. ஆனால் நமக்கு தேவைப்படும் கவரேஜ் இந்த டேர்ம் பாலிசியில் தான் கிடைக்கும்.


ஆயுள் காப்பீடு எடுக்கும் போது கவனிக்க வேண்டியவை

- கவரேஜ் தொகையை முடிவு செய்து கொள்ள வேண்டும்.
- எவ்வளவு காலத்திற்கு காப்பீடு தேவை என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும்.
- காப்பீடு எடுக்கும் நிறுவனத்தின் கிளைம் செட்டில்மேண்ட் விகிதத்தை கணக்கில் கொள்ள வேண்டும்.

அவசர கால நிதி

அடுத்த பதிவில்....

1 comment: