தனிநபர் நிதித் திட்டமிடல் - 5 அவசர கால நிதி (Personal Finance) - Save & Invest

சேமிப்பு, முதலீடு, தனிநபர் நிதி திட்டமிடல்

Tuesday, 29 May 2018

தனிநபர் நிதித் திட்டமிடல் - 5 அவசர கால நிதி (Personal Finance)இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளை காண  

1.சேமிப்பு  2.கடன்கள்  3.முதலீடு  4.காப்பீடு

ஏன் அவசர கால நிதி தேவை?

1. வேலை இழப்பு
2. மருத்துவ செலவுகள்.
3. பராமரிப்பு செலவுகள்

1. வேலை இழப்பு.

எதிர்பாராமல் வேலை இழப்பு ஏற்படும் நிலையில் நமக்கு நிச்சயம் அவசர கால நிதி தேவைப்படும். வருமானம் இல்லாத நிலையில் தற்காலிகமாக நமது மாதாந்திர செலவுகளை சமாளிக்க இது உதவும். Image Credit - upgradedpoints.com

2. எதிர்பாராத மருத்துவ செலவுகள்.

நாம் நல்ல உடல் நிலையில் இருந்தாலும், நமக்கு உடல் நல குறைவுகள் ஏற்படாது என்று நம்மால் கூற முடியுமா? நமக்கோ, நம்மை சார்ந்தவருக்கோ உடல் நல குறைவு ஏற்பட்டால், நாம் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து இருந்தாலும் எல்லா செலவுகளையும் நம்மால் திரும்ப பெற இயலாது. இந்த சூழ்நிலையில் நமக்கு அவசர கால நிதி தேவைப்படும்.

3. பராமரிப்பு செலவுகள்

நமக்கு எப்படி உடல் நலக் குறைவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதோ, அதேபோன்று நாம் வசிக்கும் வீடு, நாம் உபயோகிக்கும் வாகனம் போன்றவையும் பாதிக்கப்படலாம். வீடு, வாகனம் போன்றவற்றிற்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் நாம் பராமரிப்பு செலவு செய்ய வேண்டிருக்கும். இதற்கும் அவசர கால நிதி கை கொடுக்கும்.


எவ்வளவு தொகையை அவசர கால நிதியாக வைத்திருக்க வேண்டும்?

- நம்முடைய மாதாந்திர குடும்ப செலவுகள்
- நம்முடைய மாதாந்திர கடன் தவணைகள்
- நம்முடைய மாதாந்திர சேமிப்பு தொகை.

இம்மூன்றையும் கூட்டினால் வரும் தொகையை போல் ஆறு மடங்கு தொகையை நம் அவசர கால நிதியாக வைத்து கொள்ள வேண்டும். 

உதாரணமாக நமது மாதாந்திர வருமானம் 20 ஆயிரம் ரூபாய் எனில் அவசர கால நிதியாக ரூ. 1.20 இலட்சம் தேவைப்படும். இத்தொகையை நாம் நிரந்தர வைப்பாகவோ, அல்லது லிக்விட் மியூச்சுவல் பண்டிலோ வைத்திருக்கலாம். இதற்கு 6.5-7.0% வட்டி கிடைக்கும். சேமிப்பு கணக்கிற்கு வட்டி 3.5% தான். அதில் போட வேண்டாம்.

No comments:

Post a Comment