தனிநபர் நிதித் திட்டமிடல் - 3 (முதலீடு) (Personal Finance) - Save & Invest

சேமிப்பு, முதலீடு, தனிநபர் நிதி திட்டமிடல்

Thursday, 10 May 2018

தனிநபர் நிதித் திட்டமிடல் - 3 (முதலீடு) (Personal Finance)

கடன்களை கையாள்வது எப்படி என்பது பற்றி சென்ற பதிவில் பார்த்தோம்.. அதனை படிக்காதவர்கள் இங்கே படிக்கலாம். பகுதி-2
முதலீடு???

ஏன் ஒருவர் முதலீடு செய்ய வேண்டும்? சேமித்தால் மட்டும் போதாதா?

போதாது.

இப்போது நாம் ஒரு பொருளை ரூ.1000/- கொடுத்து வாங்கிறோம் என்று எண்ணி கொள்வோம். சரியாக ஒரு வருடம் கழித்து அதே பொருளை நாம் வாங்கினால்  நாம் இப்போது ரூ.1070/- கொடுத்து தான் வாங்க முடியும்.

ஏன் அதே விலைக்கு வாங்கி முடியாது?

இதை தான் பணவீக்கம் என்று கூறுவார்கள். பணவீக்கம் சராசரியாக ஆண்டுக்கு 5-7% என்ற அளவில் இருக்கும். இதை வேறு வகையில் கூற வேண்டும் என்றால் ஒவ்வொரு வருடமும் பணம் அதன் மதிப்பில் 7% ஐ இழக்கிறது.

Read: சுலபமாக முறையில் அதிகமாக சேமிப்பது எப்படி?

இப்போது நாம் ரூ.10000/- சேமிப்பாக வைத்துள்ளோம் என கொண்டால், இரு வருடம் கழித்து பார்த்தல் அதன் மதிப்பு இன்றைய மதிப்பில் ரூ. 8649/- ஆக குறைந்திருக்கும். எனவே, நாம் பணத்தை சேமித்தால் மட்டும் போதாது முறையாக முதலீடு செய்ய வேண்டும்.

நாம் செய்யும் முதலீடு குறைந்தது, பணவீக்கம் ஈடுசெய்யும் அளவுக்காவது வருமானத்தை தர வேண்டும். இல்லையென்றால் நாம் உழைத்து சேர்த்த பணத்தை காலம் கரைத்துவிடும்.

நாம் பொதுவாக பணத்தை சேமித்து வங்கி சேமிப்பு கணக்கில் அப்படியே வைத்து விடுவோம். இதனால், பரவாயில்லை! நாமும் சேமிக்கிறோம் என்று இப்போதே திருப்திப்பட்டுக் கொள்ளக்கூடாது. வங்கி சேமிப்பு கணக்கு வட்டி வெறும் 3.5% தான். ஆனால் பணவீக்கமோ 5-7%. வங்கி கணக்கில் சேமித்தாலும் நம்முடைய பணம் 1.5% முதல் 3.5 முடிய இழப்பை சந்திக்கிறது. எனவே, வங்கி கணக்கில் பணத்தை வைத்திருப்பது பணவீக்கத்தை தாண்டி வருமானம் தராது.

அப்போ வேற ஏதாவது முதலீட்டு திட்டங்கள் பணவீக்கத்தை விட அதிக வருமானம் தருமா?

இருக்கிறது.

முதலீட்டில் இரு வகை உள்ளது.

1. குறுகிய கால முதலீடு.
2. நீண்ட கால முதலீடு.

குறுகிய கால முதலீடு

இம்முதலீட்டின் காலம் 1 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை எனலாம்.  உதாரணமாக, திருமணம், கார், வீடு வாங்க முன்பணம் போன்ற காரணங்களுக்காக சேமிப்பது இவ்வகை முதலீட்டில் போட்டு வைக்கலாம்.

நீண்ட கால முதலீடு

இம்முதலீட்டின் காலம் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். உதாரணமாக,  பிள்ளைகளின் மேற்கல்வி செலவு, பிள்ளைகளின் திருமணம், ஓய்வு காலத்திற்காக சேமிக்கும் தொகையை இவ்வகை முதலீட்டில் போட்டு வைக்கலாம்.

குறுகிய மற்றும் நீண்ட கால முதலீடு பற்றி சொல்லிட்டிங்க.. ஆனா திட்டங்கள் பற்றி சொல்லவே இல்ல பாஸ்?

குறுகிய கால முதலீட்டு திட்டங்கள்

1. வங்கி வைப்புத் தொகை.
2. தொடர் வைப்பு தொகை.
3. கடன் சார்ந்த மியூச்சிவல் ஃபண்டு.

நீண்ட கால முதலீட்டிற்கு உகந்த திட்டங்கள்

1. பங்குகள் சார்ந்த மியூச்சிவல் ஃபண்டு.
2. நிறுவன பங்குகளில் நேரடி முதலீடு.

காப்பீடு?!?!

அடுத்த பதிவில்.

1 comment: