தனிநபர் நிதித் திட்டமிடல் - 2 (கடன்கள்) (Personal Finance) - Save & Invest

சேமிப்பு, முதலீடு, தனிநபர் நிதி திட்டமிடல்

Monday, 7 May 2018

தனிநபர் நிதித் திட்டமிடல் - 2 (கடன்கள்) (Personal Finance)

சென்ற பதிவில் சேமிப்பது எப்படி என்று பார்த்தோம்... அதனை படிக்க இங்கே க்ளிக்கவும். பகுதி-1இனி கடன்கள்...

கடன்களை பல பிரிவுகளாக பிரிக்கலாம்.

1. வீட்டுக்கடன்
2. தனிநபர் கடன்
3. சொத்து அடமான கடன்.
4. நகைக்கடன்.
5. கல்விக்கடன்.
6. கிரடிட் கார்டு கடன்.
7. வாகன கடன்.

இந்த கடன்களில் நமக்கு சொத்து உருவாக்க பயன்படுவது வீட்டுக்கடன் மற்றும் கல்வி கடன் மட்டுமே. மற்ற அனைத்தும் நமக்கு சொத்துக்கு பதில் இழப்பையே ஏற்படுத்துகிறது.

உதாரணமாக

வீட்டுக்கடன் வட்டி விகிதம் - 9% (ஆண்டுக்கு)
கல்விக்கடன் விகிதம் - 8 - 10 % (ஆண்டுக்கு)

வீட்டுக்கடன் மூலம் நாம் நமது கனவு வீட்டை பெறலாம். கல்விக்கடன் மூலம் நாம் அறிவு சொத்தை அடையலாம். இந்த இரு கடன்கள் மூலமே நாம் நம் வாழ்வுக்கு தேவையான சொத்து / செல்வத்தை உருவாக்க முடியும்.

இதர கடன்கள்

தனிநபர் கடன் வட்டி விகிதம் - 18-26 %  (ஆண்டுக்கு)
கிரடிட் கார்டு வட்டி விகிதம் - 36% (ஆண்டுக்கு)
வாகன கடன் விகிதம் -  12 - 16% வரை

நாம் முடிந்தவரை இந்த மூன்று கடன்களையும் தவிர்க்க வேண்டும். முடிந்தால் கிரடிட் பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். இந்த கடன்கள் நாம் பெறும் பயனை விட இழப்பே அதிகம்.

அப்போ நான் கார் வாங்கவே கூடாதா???

வாங்கலாம். ஆனால் கடன் மூலம் கார் வாங்க கூடாது. ஏனென்றால் கார் தேய்மானம் அடையும் சொத்து. ஆண்டுக்கு தோராயமாக 10 % என்ற அளவில் அதன் மதிப்பு குறையும். மேலும் கடன் மூலம் வாங்கும் போது 15% + 10% என்ற அளவில் 25% நமக்கு இழப்பு ஏற்படுகிறது. இது மிக அதிகம். எனவே, ஒருபோதும் கடன் மூலம் கார் வாங்காதீர்கள். 2-3 ஆண்டுகளுக்கு பணத்தை சேமித்து பின்பு வாங்கலாம். இது நல்ல முடிவாக இருக்கும். காரணம் கார் வாங்கும் போது அடையும் மகிழ்ச்சியை விட EMI கட்டும் போது அடையும் வெறுப்பு மிக அதிகம்.

எந்த கடன் நமக்கு நன்மை தரும் என்பதை எப்படி கண்டுபிடிப்பது???

நாம் பெறும் கடன் மூலம் நமக்கு வருவாய் தரும் சொத்து உருவாகும் எனில் அந்த கடனை நாம் பெறலாம்.

உதாரணம் வீட்டுக்கடன் பெறுவதன் மூலம் வீட்டை வாடகைக்கு விட்டு வருமானம் பெறலாம். வீட்டுமனையின் விலையும் உயரும்.

கல்வி கடன் பெறுவதன் திறன் பயிற்சி / தொழிற்கல்வி பெற்று அதன் மூலம் பிற்காலத்தில் அதிக வருவாய் ஈட்டலாம்.

ஆனால் வாகன கடன் பெற்று கார் வாங்கினால் ஆண்டுதோறும் வாகனம் அதன் மதிப்பு இழக்கும். அப்புறம் பராமரிப்பு செலவு, இன்சூரன்ஸ் போன்ற செலவுகள் உண்டு.

தனிநபர் கடன் சாதகமும் உண்டு பாதகமும் உண்டு. எதிர்பாரா செலவினங்களுக்கு தனிநபர் கடன் பெறலாம். ஆனால் அக்கடனை 2 ஆண்டுக்குள் முடிப்பது நல்லது.

நாம் கடனுக்காக செலுத்தும் தொகை நமது வருமானத்தில் 15% அதிகமாக இல்லாதவாறு இருப்பது நலம். வீட்டுக்கடனும் சேர்த்து எனில் 50% தாண்டக்கூடாது.

கடன் பெறுவது குறுகிய காலம் சந்தோசம் மட்டுமே அளிக்கும் என்பதை நினைவில் வைக்கவும்.

அடுத்த பகுதியில்...

முதலீடு

No comments:

Post a Comment