தனிநபர் நிதித் திட்டமிடல் - 1 (சேமிப்பு) (Personal Finance) - Save & Invest

சேமிப்பு, முதலீடு, தனிநபர் நிதி திட்டமிடல்

Tuesday, 1 May 2018

தனிநபர் நிதித் திட்டமிடல் - 1 (சேமிப்பு) (Personal Finance)


தனிநபர் நிதித் திட்டமிடல்???

இதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா!! நம்மில் சிலரை தவிர பெரும்பாலானோர் இதை பற்றி அறிய வாய்ப்பில்லை. குறைந்த வருமானம், நடுத்தர வருமானம் ஈட்டுவோரை போலவே, அதிக வருமான ஈட்டுவோரும் மாத கடைசியில் திட்டாடுவதை பார்க்கிறோம். என்ன அதிக வருமானம் பெறுவோர் பட்ஜெட்டிலும் துண்டு விழுமா என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. ஆமாம். அவர்களும் நம்மை போலத்தான்.


எப்பொழுதெல்லாம் நமக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறதோ அப்போது அத்தொகைக்கு ஏற்ற செலவினை நாமே உருவாக்கி விடுகிறோம். நாம் அனைவரும் அப்படித்தான். இதனால் நம்மால் பெரிதாக எதையுமே சேமிக்க முடிவதில்லை.


நம்முடைய சேமிப்பு முறை

வருமானம் - செலவு = சேமிப்பு

இம்முறையில் நாம் நமது வருமானத்தில் முன்பே செலவு செய்து விடுவதால் சேமிக்க முடிவதில்லை. ஏனென்றால் நாம் அனைவருமே வரவுக்கு ஏற்ற செலவு திட்டம் வைத்திருப்போம்!!!. 

அப்போ சேமிக்க வேறு வழியில்லையா?

இருக்கிறது. மேலே சேமிக்கும் முறையை இப்படி மாற்றி பாருங்கள்.

வருமானம் - சேமிப்பு = செலவு

நமது வருமானத்தில் இருந்து சேமிக்க நினைக்கும் தொகை நாம் முதலில் எடுத்துவிட்டு மீதி தொகையில் செலவு செய்யலாம். இது ஒன்றும் கடினமில்லை. சற்று முயன்றால் கைகொள்வது எளிது.

எவ்வளவு சேமிப்பது

சேமிப்பே நமது செலவு

ரூ.10000 வரை வருமானம் பெறுவோர் - 10 %
ரூ. 10000 - 30000 வரை - 15-20 %
ரூ. 30000 - 60000 - 20-30 %
ரூ. 60000க்கு மேல் - 30-40%
ரூ. 100000க்கு மேல் -  40%

மேலே கொடுக்கப்பட்ட அளவுகளில் குறைந்தப்பட்சம் நாம் அனைவரும் வருமானத்திலிருந்து சேமிப்பு தொகையையே முதல் செலவாக மேற்கொள்ள வேண்டும். இதுதான் உலகம் முழுவதும் நிரூபிக்கப்பட்ட முறை. சேமிப்புக்கென்று ஒரு தனி வங்கி நாம் துவக்கி கொள்ள வேண்டும். சேமிப்பு தொகையை இக்கணக்கில் வைத்து கொள்ளலாம்.

செலவு செய்தது போக மீதிதான் சேமிப்பு என்றால் அந்த ஆண்டவனால் கூட நம்மை காப்பாற்ற முடியாது.

அதனால், வருமானத்தில் மேற்கொள்ளப்படும் முதல் செலவாக சேமிப்பு இருக்கட்டும்.


அடுத்த பதிவில்

கடன்கள்......  பகுதி-2


7 comments:

 1. Suburb ... formula.., superb... concept... I'll flow this method from this month.. Thanks buddy

  ReplyDelete
  Replies
  1. Thanks for your comment. Do support me by share this post on facebook and whatspp

   Delete
 2. Super bala all the best, fantastic tamil blog, need of the hour

  ReplyDelete
 3. தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பதியலாமே http://tamilblogs.in

  ReplyDelete
 4. your post is valuable, thank u so much for posting.
  can u suggest any LIC scheme for investment purpose with good returns.

  ReplyDelete
 5. suggest me about usage of credit card and also tell me weather it is right or wrong

  ReplyDelete